கர்ணன்: தனுஷின் போஸ்டர் ரிலீஸ்

Dhanush Karnan Movie Poster

by Chandru, Jul 28, 2020, 16:11 PM IST

இந்த ஆண்டில் தனுஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று மாரி செல்வராஜ்.இயக்கிய 'கர்ணன்'. கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் ராஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் தனுஷின் 37வது பிறந்த நாளான இன்று கர்ணன் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் தாணு வெளியிட்டுள்ளனர்.போஸ்டரில் ஏராளமான மக்கள் வாள் வைத்திருக்கிறார்கள். இயக்குனர் மாரி செல்வ ராஜும் தனுஷின் பிறந்த நாளை வாழ்த்திப் படத்தின் தலைப்பு சுவரொட்டியை வெளியிட்டார்.

படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் கர்ணன் அதனால் தலைப்பும் அதுவே வைக்கப்பட்டிருக்கிறதாம்.நடிகர்கள் லால், நட்டி, நடிகர் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகின்றனர். இதற்கிடையில், தனுஷ் நடிக்கும் 'ஜகமே தந்திரம்' படத்தின் தயாரிப்பாளர்கள் ' ரகிட ரகிட' என்ற முதல் தனிப்பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.தனுஷுக்கு ஏற்கெனவே வெளியான வட சென்னை, அசுரன், பட்டாசு ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. விரைவில் செல்வராகவன் இயக்கத் திலும் மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இது தவிர இந்தி படமொன்றில் தனுஷ் நடிக்கிறார்.

You'r reading கர்ணன்: தனுஷின் போஸ்டர் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை