Friday, May 14, 2021

சந்திரமுகி 2 பட ஹீரோயின் யார்? லாரன்ஸ் திடீர் அறிவிப்பு..

Who is Chadramuki 2 Heroine: Actor Raghava Lawrence

by Chandru Aug 1, 2020, 19:12 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். ஆனால் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை அவர் முதல் பாகத்தில் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்று 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தில் சந்திரமுகியாக நடிப்பது யார் என்று பல்வேறு யூகங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவே இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அதனை ஜோதிகாவே மறுத்திருந்தார். அடுத்து சிம்ரன் பெயர் அடிபட்டது, அதனை சிம்ரன் மறுத்திருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் தோனி படத்தில் ஹீரோயினாக நடித்த கியாரா அத்வானி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.இது குறித்து சந்திரமுகி 2 பாகத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா அவர்கள் சிம்ரன் அவர்கள், மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம் அது பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் .

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

You'r reading சந்திரமுகி 2 பட ஹீரோயின் யார்? லாரன்ஸ் திடீர் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை