திரைப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்தும் குணம் அடைந்தார். எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்றுச் சிகிச்சை நடக்க நேற்று தகவல் பரவியது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அதற்கு எஸ்பிபி இன்று வெளியிட்ட வீடியோவில் பதில் அளித்திருக்கிறார்.
தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. சுயநினைவுடன் இருக்கிறார். மெதுவாக அதே சமயம் சீராக அவர் குணம் அடைந்து வருகிறார். இன்னமும் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை தொடர்கிறது. பெரிய மாற்றம் என்று எதுவும் சொல்வதற்கில்லை. அப்பாவை பற்றி சில நாட்களாக மீடியாக்களில் தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது . அப்பாவுக்கு நுரையீரல் மாற்றுச் சிகிச்சை நடக்கவிருப்பதாகவும் அதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவீட்டுக்கு வந்து விட்டதாகவும், ரசிகர்களுக்காக அப்பா மருத்துவமனையிலிருந்து பாடுவதாகவும் செய்திகள் வந்தது.
இந்த தகவல்களால் தொடர்ந்து எங்களுக்கு போனில் அழைத்து பலரும் விவரம் கேட்கிறார்கள். எங்கிருந்து இப்படிப்பட்ட செய்திகள் எங்கள் குடும்பத்தாரை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. போலி செய்தி எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரிய வில்லை. இந்த தகவல்கள் எல்லாமே பொய்யானது. எந்த பெரிய விஷயமாக இருந்தாலும் அதை நான் அல்லது எனது பிஆர் ஒ நிகில் முருகன் அல்லது மருத்துவமனையிலிருந்து தான் வெளியாகும். மீடியாக்கள் எங்கள் நிலைமை தயவு செய்து புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சரண் கூறினார்.