சூர்யா படத்தில் அப்துல்கலாமாக நடித்தவர் யார் தெரியுமா?

by Chandru, Nov 15, 2020, 16:13 PM IST

சூர்யாவின் சூரைப் போற்று ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். முன்னதாக இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி படம் ஓடிடியில் வெளியானது.

விமான நிறுவனம் ஆரம்பிக்கும் முயற்சியை கையிலெடுத்து அதில் எப்படி சூர்யா வெற்றி பெறுகிறார் என்பதே கதை. டெக்கான் அதிபரின் வாழ்க்கை சம்பத்தை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர். விமர்சகர்களும் அதிக ரேட்டிங் கொடுத்து பாராட்டி எழுதி வருகின்றனர்.

இப்படத்தில் இடம் பெற்ற அப்துல் கலாம் காட்சி நெகிழ்ச்சியாக அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் அப்துல்கலாம் பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் கலக்க போவது யாரு நவீன்.
அப்துல் கலாமாக நடித்தவர் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர் ஆவார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் தோற்றம் கொண்ட ஒருவரை படக்குழு தேடியது. அப்போதுதான் ஷேக் மைதீன் பற்றி தெரிய வந்தது. ஷேக் உண்மையில் அப்துல் கலாம் மீது பாசம் கொண்டவர். அதனால் தனது தலை முடி ஸ்டைலையே அப்துல்கலாம் போல் மாற்றிக்கொண்டார்.

இவரை அப்பகுதியில் உள்ளவர்கள் உடுமலை கலாம் என்று அழைக்கின் றனர்.
சூரரைப் போற்று படத்தில் நடித்த அவர் அப்படத்தை பார்ப்பதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் என்பதுதான் சோகம்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை