சிம்பு ஜோடியாக சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர் சனாகான். மேலும் பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்தவர் பிறகு இந்தியில் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு பிரபலம் ஆனதுடன் பின்னர் சல்மான் கான் படத்திலும் நடித்தார்.
இந்நிலையில் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவருடன் சனா கான் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வந்தார். அதை உறுதியும் செய்தார். பிறகு இருவரும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரேக் அப் செய்துக் கொண்டு பிரிந்தனர். இணைய தளத்தில் ஒருவர்மாறி ஒருவர் குற்றம் சுமத்தினர்.
சினிமா மற்றும் இயல்பு வாழ்க்கை வெறுத்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சனா கான் முஸ்லிம் சாமியார் ஆகிவிட்டதாக தெரிவித்தார். இனி சினிமாவில் நடிக்கமாட்டேன். மனிதாபிமான சேவை யில் படைப்பு கடவுளின் சேவையிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன் என்றார். வெள்ளை உடை அணிந்து முஸ்லிம் பென் சாமியாராகவும் மாறினார். ஆனால் அடுத்த 2 மாதத்துக்குள் சனாவிடம் திடீர் மனமாற்றம் எழுந்தது. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். குஜராத்தை தலைமை இடமாக கொண்ட மடத்திலிருக்கும் முப்தி அனாஸ் என்ற சாமியா ரைசனா கான் திரு மணம் செய்துக் கொண்டார்.
சனா திடீர் திருமணம் நெட்டில் வைரலாக பரவியது. சனா -அனாஸ் ஜோடி எளிய சுயவிவர திருமணத்தை நடத்தியது. 33 வயதான நடிகையின் பல வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன, அதில் தம்பதியினர் கையில் படிக்கட்டுக்கு கீழே நடந்து செல்லும் படமும் இடம் பெற்றுள்ளது. சனா ஒரு வெள்ளை திருமண கவுன் அணிந்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது கணவர் வெள்ளை பாரம்பரிய உடையை அணிந்துள்ளார். அவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து 'நிக்கா முபாரக்' என்று எழுதப்பட்ட சாக்லேட் கேக்கை வெட்டினர்.
இந்நிலையில் சனாகான் திருமணத்துக்கு முன்பு வெள்ளை நிற சாமியார் உடையை துறந்து கலர்புல் உடையில் மெஹந்தி விழா வில் கலந்து கொண்டு கைகளில் மெஹந்தி போட்டுக் கொண்ட படத்தை வெளியிட்டார்.
அதில் அவர் கல்யாண பூரிப்புடன் வெட்கம் பொங்க போஸ் தந்திருக்கிறார். ஆரன்ஞ் நிற உடையில் பிங்க் துப்பாட்டா அணிந்து அசல் நடிகையாக பளிச்சென காட்சி தந்தார்.