விஜய், அஜீத் வில்லன் நடிகர் ஹீரோவாகி கலக்குகிறார்..

by Chandru, Nov 26, 2020, 21:49 PM IST

வாழ்க்கை ஒரு வட்டம் கீழ இருக்கிறவன் மேலே வருவான் மேலே இருகறவன் கீழே வருவான் என்று விஜய் ஒரு படத்தில் வசனம் பேசுவார். அது சினிமா நடிகர்கள் வாழ்க்கையில் கண்கூடாக நடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் நடித்த துப்பாக்கி படத் தில் தீவரவாத கூட்ட தலைவ னாக அதிரடி வேடத்தில் நடித் தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். இவர் அதற்கு முன்பு பில்லா படத்தில் அஜீதுக்கு வில்லனாக நடித் தார். பிறகு சூர்யாவுடன் நண்பராக அஞ்சான் படத்தில் நடித்தார். அஞ்சான் தமிழில் பெரிதாக பேசப்படா விட்டா லும் இப்படம் சில மாதங் களுக்கு முன் இந்தியில் மொழி மாற்றமாகி ரசிகர் களிடம் வரவேற்பை பெற்றது அதற்கு காரணம் அப்படத்தில் விதியூத் நடித்திருந்ததும் ஒரு காரணம்.

உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் வித்யூத் ஜாம்வால் தற்போது இந்தியில் ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்காப்பு கலைகளை முறையாக கற்றவர் வித்யூத். கடந்த ஆண்டு வெளியான கமாண் டோ இந்தி படத்தின் மூலம் அதிரடியான ஆக்‌ஷன் காட்சி களில் நடித்து ரசிகர்களை வளைத்து போட்டார். தற்போது சோலோ ஹீரோ வாக அவர் நடிக்கும் படங் களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளை கற்று தேர்ந்தவர் என்பதால் தனது படங்களில் தனக்கு டூப்போடுவதில்லை. எவ்வளவு கடினமான ஆக்‌ஷன் காட்சியாக இருந்தாலும் ஒரிஜலாக அவரே செய்கிறார். தினமும் மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியை தவறாமல் செய்கி றார். புதிய படம் ஒன்றுக்காக இன்ஃபினிட்டி ஆயுதத்தை கொண்டு மோதும் சண்டை காட்சியில் நடிக்க உள்ளார். அதற்காக அவர் கடற்கரையில் தினமும் அந்த கருவியை வைத்து பயிற்சியில் ஈடுபடு கிறார். வித்யூத் பயிற்சி செய்யும் ஆயுதம் இதுவரை தமிழ் படத்தில் பார்த்தது போல் தெரியவில்லை. ஆங்கில படங்களில் வரும் விண்வெளி தாக்குதல் படங்கள், சூப்பர் மேன் படங்களில் பார்த்தது போன்ற ஆயுதம் என்பதால் இந்த புகைப்படம் நெட்டில் வைர லாகி வருகிறது.

You'r reading விஜய், அஜீத் வில்லன் நடிகர் ஹீரோவாகி கலக்குகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை