வில்லி வேடத்தில் நடிக்கும் அழகு நடிகை..

by Chandru, Dec 7, 2020, 09:53 AM IST

ஹீரோக்களுடன் மரத்தையும் பூங்காவையும் சுற்றி லவ் டூயட் பாடி நடித்து சில நடிகைகளுக்கு போர் அடித்த நிலையில் மாறுபட்ட வேடங்களைத் தேர்வு செய்து நடிக்கின்றனர். அனுஷ்கா, நயன்தாரா. திரிஷா போன்ற நடிகைகள் இது போன்ற வேடங்களை அதிகம் தேர்வு செய்கின்றனர். சில நடிகைகள் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விஜய் முதல் எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்த தமன்னாவும் சமீபகாலமாக மாறுபட்ட வேடங்களை எதிர்பார்க்கிறார். கடைசியாக தமன்னா தமிழில் விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் என்ற படத்தில் நடித்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது தமிழில் அவருக்குப் படம் எதுவும் இல்லாவிட்டாலும் இந்தியில் போல் சுடியான் மற்றும் தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார். தவிர வெப் சீரீஸ் ஒன்றிலும் நடிக்கிறார்.

கடந்த 2 மாதத்துக்கு முன் வெப் சீரிஸில் நடிக்க தமன்னா ஐதராபாத் வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை மேற் கொண்டு பின்னர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனிமைப்படுத்திக்கொண்டார். இரண்டு வாரம் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். ஆனாலும் உடனடியாக ஷூட்டிங்கில் பங்கேற்காமல் சில நாட்கள் உடற்பயிற்சி யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தமன்னா ஐதராபாத் புறப்பட்டு வந்தார். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் தடைப்பட்ட வெப் சீரிஸில் பங்கேற்று நடித்தார்.

ஹாலிவுட் பாணியில் ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. 11த் ஹவர் (லெவன்த் ஹவர்) என இதற்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. தமன்னா முதன்முறை நடிக்கும் வெப் சீரிஸ் இது. இதன் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தார் தமன்னா. பின்னர் வெப் சீரிஸ் குழுவினர் பார்ட்டி ஏற்பாடு செய்தனர் அதில் தமன்னா கலந்துகொண்டார். அடுத்து கோபிசந்த் உடன் சீட்டிமார் படத்தில் தமன்னா நடிக்கிறர். இதில் கபடி கோச் ஆக அவர் வேடம் ஏற்கிறார். தொடர்ந்து நிதின் நடிக்கும் அந்தாதுஹன் ரீமேக்கில் நடிக்கிறார். இதில் முதன்முறை வில்லி வேடம் ஏற்கிறார் தமன்னா.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை