இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார்.. ப.சிதம்பரம் கிண்டல்
God save Indias economy, says P.Chidambaram
இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று ட்விட்டரில் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நூறு நாட்களுக்கு மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை ஏஜென்சிகள் கடுமை காட்டினாலும், அவர் ட்விட்டரில் விமர்சிப்பதை விட்டு விடவில்லை. தொடர்ந்து மத்திய அரசை துணிவுடன் விமர்சித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டு வருகிறார்.
அவர் ட்விட்டர் பக்கத்தில் நேற்று(டிச.2) வெளியிட்ட ஆங்கில பதிவில் கூறியிருப்பதாவது:
ஜி.டி.பி புள்ளிவிவரங்கள் பொருட்படுத்த தேவையில்லை. தனிநபர் வருமான வரி குறைப்பு, இறக்குமதி சுங்கக் கட்டணங்கள் அதிகரிப்பு...
இவையே பாஜக அரசின் சீர்திருத்த ஐடியாக்கள். இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.