`நான் உங்க மனைவி இல்லங்க - உறவினரால் தருமபுரி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

dharmapuri old man tried to kill his relative lady

by Sasitharan, Mar 9, 2019, 22:40 PM IST

மனைவி என நினைத்து உறவினரை ஒருவர் கழுத்தறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள பாலஜக்கமனஅள்ளி சேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கள் பொன்னுசாமி மற்றும் பெரியம்மாள். கணவன் மனைவியான இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன்படி பெரியம்மாள் பொம்மிடி ஜாலிகொட்டாய் ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே 2 தினங்களுக்கு முன்பு பெரியம்மாள் தனது பேத்தியின் புனித நீராட்டு விழாவிற்காக சேவன்கொட்டாயுக்கு வந்துள்ளார். அப்போது தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பெரியம்மாவை அழைத்துள்ளார் பொன்னுசாமி.

ஆனால் அதற்கு அவர் மறுக்கவே கோபத்துடன் திரும்பி சென்றுள்ளார். இதன்பிறகு நடந்த சம்பவத்தை விவரிக்கும் போலீசார், "நேற்று அதிகாலை 4 மணியளவில் உறவினர் வீட்டில் இருந்து உறவினரின் மனைவி சிவகாமி வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருட்டில் மறைந்து இருந்த பொன்னுசாமி வெளியே வருவது தனது மனைவி பெரியம்மாள் என்று நினைத்து பின்னால் சென்று சிவகாமியின் கழுத்தை அரிவாளால் அறுத்தார். அப்போது சிவகாமி தான் உங்களது மனைவி இல்லை என்று கூறிய வுடன் விபரீதத்தை உணர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் பொன்னுசாமி. கழுத்து அறுக்கபட்ட நிலையில் அலறியபடியே சிவகாமி ஓடிவர அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க இப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பொன்னுசாமியை கைது செய்துள்ளோம்" என்றனர்.

 

You'r reading `நான் உங்க மனைவி இல்லங்க - உறவினரால் தருமபுரி பெண்ணுக்கு நேர்ந்த சோகம் Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை