வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் அவதி

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம்

by Rajkumar, Sep 26, 2018, 06:05 AM IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் இடம் மாற்றப் பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வட்டாட்சியர் அலுவலகம் இருந்த இடத்தில் இட நெரிசலாக இருப்பதாலும், அப்பகுதியில், வாகன நெரிசல் ஏற்படுவதாலும், அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு தெற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் 4 வழி சாலைக்கு அருகில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி வட்டத்தில் 64 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த வட்டத்தில் வசிக்கும் கிராம மக்கள் பொது கோரிக்கைகளையும், தங்களின் மனுக்களையும், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்டவைகளைப் பெறுவதற்கும் வட்டார அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டாச்சியர் அலுவலகத்தின் புதிய கட்டடம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அங்கே சென்றுவர கிராம மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.

You'r reading வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் அவதி Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை