ஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் & ஈப்பு ஓட்டுநர்

தகுதி:

அலுவலக உதவியாளர்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஈப்பு ஓட்டுநருக்கான: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV (இளகு ரக அல்லது கனரக ) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மோட்டார் வாகன சட்டம் Act 1988 (Central Act 59 of 988) இதன்படி ஓட்டுரிமை பெற்றிருக்க வேண்டும். மோட்டார் நெறிமுறைகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 18 வயது முதல் 35 வயது வரை

சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 09.12.2020-க்குள் விண்ணப்பித்திடச் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020113084-(1).pdf

Advertisement
/body>