தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், சமையலர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர்: சமையலர்
பணியிடங்கள்: 32
வயது: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 24.12.2020க்குள் விண்ணப்பித்திட வேண்டும்.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.