டிப்ளமோ முடித்தவர்களுக்கு DRDO வில் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் DRDO ல் திட நிலை இயற்பியல் ஆய்வகத்தில், டிப்ளமோ முடித்தவர்களுக்கு பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் திடநிலை இயற்பியல் ஆய்வகப் (SSPL) பணியில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் ஓராண்டு காலம் ரூ.8 ஆயிரம் தொகையோடு பயிற்சி வழங்கப்படும். 70 காலி இடங்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பிக்க முடியும். மின்னியல், மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல் டிப்ளமோ படிப்புகளை முடித்த விண்ணப்பதாரர்களும், எம்ஓபி (Diploma in Modern Office Practice) மற்றும் நூலக அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் 2018 மற்றும் அதற்குப் பிறகு டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.

டிசம்பர் 24ஆம் தேதி இதற்குக் கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 காரணமாக விண்ணப்பங்களையும் தேவையான ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு மெயில் அனுப்ப வேண்டும். மேலும் இப்பயிற்சிக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/12/APPRENTICESHIP.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :