இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Advertisement

இந்தியன் வங்கியிலிருந்து காலியாக உள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கான தகுதி:

இராணுவத்தில் கர்னல் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது கடற்படை / விமானப்படையில் (OR) சமமான பதவியில் இருப்பவர்கள். அல்லது
துணை ஆய்வாளர் ஜெனரலின் ஒரு போலிஸ் அதிகாரி அல்லது பாரா-ராணுவ சேவையில் (OR) சமமான பதவியில் இருப்பவர்கள் அல்லது

எஸ்.எம்.ஜி அளவுகோல் IV இல் பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பு அதிகாரி அளவில் குறைந்தது இரண்டு வருட சேவை பணிபுரிந்தவர்கள்.

ஊதியம்: ரூ.89,890 /- முதல் 1,00,350 /- வரை

வயது: அதிகபட்சம் 55 வயது வரை

கட்டணம்: ரூ.1000/-

எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ மாற்றுத்திறனாளி/பணி ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் – ரூ.100/- செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
முதல்நிலை தேர்வு / குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 30.01.2021க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Application-format-for-Chief-Security-Officer.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>