பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலை!

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள மத போதகர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: மதபோதகர்

மொத்த பணியிடங்கள்: 194

பணிக்கு தகுதி:

ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கீழ்கண்ட தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

Pandit and Pandit (Gorkha) – Acharya in Sanskrit அல்லது Shastri in Sanskrit பட்டம் வேண்டும். Karam Kand பாடப்பிரிவில் டிப்ளமோ வேண்டும்.

Granthi – பஞ்சாபியில் கியானி தேர்ச்சி வேண்டும்.

Maulvi and Maulvi (Shia) – முஸ்லீம் வேட்பாளர்கள் அரபு மொழியில் மவுலவி ஆலிம் அல்லது உருது மொழியில் ஆதிப் ஆலிம் பட்டம் வேண்டும்.

Padre – திருச்சபை அதிகாரத்தால் ஆசாரியராக நியமிக்கப்பட்டு, உள்ளூர் பிஷப்பின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம் வேண்டும்.

Bodh Monk (Mahayana) – பொருத்தமான அதிகாரத்தால் துறவி / புத்த பாதிரியாராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை

வயது: 25 வயது முதல் 34 வயது வரை

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தேர்வு

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் 09.02.2021க்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/Indian-Army-Religious-Teacher---%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :