பொறியியல் துறையில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

Electronics Corporation of India Limited(ECIL).லிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் இளநிலை கைவினைஞர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 03.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 28

கல்வி தகுதி:

தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் முதல் வகுப்பு தேர்ச்சியும், அத்துடன் துறை ரீதியான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டயபடிப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் சம்பந்தப்பட்ட துறையில் ஒருவருடம் பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை கைவினைஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரர்கள் பள்ளிப்படிப்பு அல்லது தொழிற்பயிற்சி முடித்து , சம்பந்தப்பட்ட துறையில் ஒருவருடம் பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

தொழில்நுட்ப அலுவலர் - ரூ. 23000/-

ஆராய்ச்சி உதவியாளர்-A - ரூ. 20202/-

இளநிலை கைவினைஞர் - ரூ. 18382 /-

வயது:

தொழில்நுட்ப அலுவலர் - அதிகபட்ச வயது 30

ஆராய்ச்சி உதவியாளர்-A - அதிகபட்ச வயது 25

இளநிலை கைவினைஞர்- அதிகபட்ச வயது 25

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு / Trade Test / தனிப்பட்ட நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் online மூலம் 03.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Advt.No.-04_2021.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>