கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

by Loganathan, Feb 1, 2021, 20:47 PM IST

வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையிலிருந்து காலியாக உள்ள கணினி இயக்குபவர், ஆற்றுப்படுத்துனர் மற்றும் சமையலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 5

கணினி இயக்குபவர்-01
ஆற்றுப்படுத்துனர்-03
சமையலர்-01

கல்வி தகுதி:

கணினி இயக்குபவர்:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஒரு வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆற்றுப்படுத்துனர்:

இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சமையலர்:

08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

கணினி இயக்குபவர்-ரூ.9,000/-

ஆற்றுப்படுத்துனர்-ஒரு நாளைக்கு ரூ.1,000/- வீதம்

சமையலர்-ரூ.10,000/-

வயது: கணினி இயக்குபவர், ஆற்றுப்படுத்துனர் ஆகிய பணிகளுக்கு - 40 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும். சமையலர் பணிக்கு - 33 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 05.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கணினி இயக்குபவர் & சமையலர் பணிக்கு விண்ணப்பங்கள் சேர வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்,
வேலூர் 632001.

ஆற்றுப்படுத்துனர் பணிக்கு விண்ணப்பங்கள் சேர வேண்டிய முகவரி:

கண்காணிப்பாளர்,
அரசினர் குழந்தைகள் காப்பகம்,
ராஜீவ் காந்தி நகர், செங்குட்டை,
காட்பாடி, வேலூர் 632007.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/2021012342.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/2021012364.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/2021012360.pdf

You'r reading கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை