பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

Advertisement

மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 21.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கான இணையான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் முடித்து இருக்க வேண்டும்.

ஊதியம்: வருமான அலகு-1 Rs. 5200-20200 மற்றும் கிரேடு பே ரூ.1800.

வயது: 18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02-01-1996 க்கு முன்னர் பிறந்திருக்கக் கூடாது மற்றும் 01-01-2003 க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

18 முதல் 27 வயது உள்ளவர்களில் 02-01-1994 பிறகும், 01-01-2003 க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.100 மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையத்தின் மூலம் 21.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/notice_mts_05022021.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>