கொரோனா பாதித்து மரணம் உடலை பார்க்கவும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கும் கேரளாவில் அனுமதி

by Nishanth, Nov 26, 2020, 16:14 PM IST

கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் உடலை நெருங்கிய உறவினர்கள் பார்ப்பதற்கும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கும் அம்மாநில சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

பொதுவாக கொரோனா பாதித்து ஒருவர் மரணமடைந்தால் அவரது உடலை தொடவோ, பார்ப்பதற்கோ அனுமதி கிடையாது. மூன்று அல்லது நான்கு அடுக்குகளில் பிளாஸ்டிக் கவரால் பொதிந்து 10 அடி ஆழத்தில் உடல்களை புதைக்க வேண்டும். கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை எப்படி புதைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படியே கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றியே உலகம் முழுவதும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை நெருங்கிய உறவினர்கள் கூட பார்க்க முடியாது. இறந்தவர்களின் உடலிலிருந்து கொரோனா வைரஸ் எளிதில் பரவ வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலை நெருங்கிய உறவினர்கள் பார்ப்பதற்கும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கும் அம்மாநில சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி உடலை சுத்தப்படுத்தும் சமயத்தில் தேவைப்பட்டால் நெருங்கிய உறவினர்கள் ஒருவருக்கு மட்டும் உடலை பார்க்க அனுமதி அளிக்கப்படும். அப்போது உடலில் வெள்ளை துணியால் மூடுவதற்கும் புனித நீர் தெளிப்பதற்கும் அனுமதி அளிக்கப்படும். ஆனால் உடலை தொடவோ, குளிப்பாட்டவோ, முத்தம் கொடுக்கவோ கூடாது. உடலை சுத்தப்படுத்த பின்னர் நெருங்கிய உறவினர் யாராவது தனி வார்டில் வைத்து உடலைப் பார்க்க அனுமதி அளிக்கப்படும். பிரேத கிடங்கில் வைத்தும் தேவைப்பட்டால் உடலை பார்க்கலாம். மயானத்தில் வைத்து உடலைப் புதைப்பதற்கு முன்பாக முகத்தை மட்டும் பார்க்கவும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை