பாஜக பிரமுகரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸார்?

by Manjula, Sep 28, 2018, 10:23 AM IST

பாரதிய ஜனதா கட்சி குறித்து விமர்சித்தவரை இறந்து விட்டதாக முகநூலில் பதிவிட்ட பா.ஜ.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

சிலர் தங்கள் விருப்பமான கட்சிகளை எதிர்ப்பவர்களை முக நூலில் அவதூறாக விமர்சிப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

அந்தவகையில் காங்கிரஸை சேர்ந்த குளிவிளையை சேர்ந்த டூபஸ் பெலுடி தொடர்ந்து பாரதிய ஜனாதாவையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து கருத்து வெளியிட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இதனை தாங்கி கொள்ள இயலாத பாரதிய ஜனதா பிரமுகரான கோபி என்பவர் கிறிஸ்துராஜ் என்ற பெயரில் போலி கணக்கு ஒன்றை முகநூலில் தொடங்கி இருக்கிறார்.

சவுதி அரேபியாவில் ஓட்டுனராக வேலை செய்யும் கோபி பெயரை மாற்றி போலி கணக்கில் பதிவிட்டால் யாருக்கு தெரிய போகிறது என்ற எண்ணத்தில் டுபஸ் பெலுடின் நட்பு வட்டத்திற்குள் நுழைந்து அவருடன் உரையாடி இருக்கிறார். டுபஸ் பெலுடின் பதிவிடும் பாஜக் தொடர்பாக விமர்சனங்களுக்கு கடுமையான வார்த்தைகளை பதிவிட்டு சண்டையிட்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரதமர் மோடியையும் மத்திய பாரதீய ஜனதா ஆட்சியையும் கடுமையாக விமர்சித்ததால் ஆத்திரம் அடைந்த கோபி டுபஸ் பெலுடினின் முக நூல் கணக்கில் டைம்லைனில் அவரது மனைவி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததோடு டுபஸ் பெலுடின் இறந்து விட்டதாகவும் அவரது படத்தை போட்டு அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகின்றது.

முக நூல் நண்பர்கள் தெரிவித்த பின்னர் தான் டுபஸ் பெலுடினுக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 11 ந்தேதி இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

காவல்துறையினர் விசாரணையில் இந்த அவதூறு பதிவு சவுதி அரேபியாவில் இருந்து மொபைல் போன் மூலம் போலி பெயரை பயன்படுத்தி பதிவிட்டு இருப்பதை கண்டறிந்தனர். மேலும் அந்த செல்போனில் இருந்து யார் யாருக்கு அழைப்பு செல்கிறது. குறுந்தகவல் அனுப்பபடுகின்றது என்பதையும் கண்டறிந்தனர்.

சைபர் குற்றபிரிவு காவல்துறையினருக்கு கோபி ஊருக்கு திரும்புவது தெரியவந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவில் இருந்து ஊர் திரும்பிய சில மணி நேரத்தில் கோபியை கைது செய்தனர்.

முகநூல் நண்பர்கள் நாகரீகமாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். இல்லை என்றால் ஜெயிலுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதற்க்கு இந்த சம்பவமே உதாரணம்.

You'r reading பாஜக பிரமுகரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸார்? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை