சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி -உச்சநீதிமன்றம்

by Manjula, Sep 28, 2018, 11:16 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

கேரள மாநிலம் பத்னம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மாதவிடாய் காரணமாக தூய்மையாக இல்லை என்ற சாஸ்திர சம்பிரதாய அடிப்படையில் அக்கோவில் நிர்வாகம் அனுமதிக்க மறுத்து வருகிறது. பல வருடங்களாக இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் 10 முதல் 50 வயது வரையிலுள்ள பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

சபரிமலையில் எல்லா வயதுப் பெண்களையும் அனுமதிப்பதில் ஆட்சேபம் இல்லை என்று கேரள அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோவில் தேவஸ்தானம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆகம விதிகளின்படி பெண்களை அனுமதிப்பது தவறு என்றும் கூறப்பட்டது.

கோவில் நிர்வாகத்தின் நடைமுறை அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று ஏற்கனவே நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். பரபரப்பான வாத எதிர்வாதங்களுக்குப் பின்னர் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இன்று வழங்கப்பட்ட தீர்பின் விவரங்கள்:


11:28 AM சபரிமலை தீர்ப்புக்கு தமிழக பெண்கள் வரவேற்பு.

11:18 AM தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்வோம்- திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் அறிவிப்பு.

11:15 AM சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது - நீதிபதி இந்து மல்ஹோத்ரா நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு.

11:11 AM  சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கேரள அரசு வரவேற்பு.

10:57 AM 5 நீதிபதிகளில் 4 பேர் ஒரே தீர்ப்பு.

10:54 AM சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி - உச்ச நீதிமன்றம்.

10.57: "பெண்கள் கோவில் நுழைய சமமாக உரிமை உள்ளவர்கள்"

10:54 AM எல்லா வயது பெண்களையும் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு

10:53 AM ஐயப்ப வழிபாடு என்பது தனி மதம் அல்ல, இந்து மதத்தோடு இணைந்தது- உச்சநீதிமன்றம்

10:53 AM சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

10:53 AM சபரிமலை வழக்கு: 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பளிக்கிறார்கள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மற்றும் தனி தீர்ப்பு

10:50 AM பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை - தலைமை நீதிபதி

பெண்களை ஒரு பக்கம் கடவுளாக மதிக்கிறார்கள் - தலைமை நீதிபதி

இன்னொரு பக்கம் கட்டுப்பாடும் விதிக்கிறார்கள் - தலைமை நீதிபதி

10:48 AM 5 நீதிபதிகளில் 3 பேர் ஒரே தீர்ப்பை அளிக்கின்றனர்

2 நீதிபதிகள் தனித் தனியாக தீர்ப்பளிக்கின்றனர்

10:48 AM நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

10:47 AM சபரிமலை வழக்கு: தலைமை நீதிபதி தீர்ப்பை வாசிக்கிறார்

10:47 AM எந்த தீர்ப்பாக இருந்தாலும் பின்பற்றுவோம் - தேவஸ்தானம்

10:42 AM தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி கான்வில்கர் தீர்ப்பை ஒரே தீர்ப்பை வழங்குகிறார்கள்

10:17 AM சபரிமலை வழக்கு: மொத்தம் 4 நீதிபதிகள் தீர்ப்பளிக்கிறார்கள்

5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள்

இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கில் தீர்ப்பு

10:07 AM சபரிமலை வழக்கு 30 வருடமாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.

1991ல் முதன்முதலாக சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

1991ல் எஸ். மஹாதேவன் என்ற நபர் கேரளா ஹைகோர்ட்டில் இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.

 10:07 AM 1991ம் இறுதியில் வருடம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சபரிமலை தேவஸ்தான விதியின் படியும் இது சரியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 10:06 AM  2006ல் பிரபல சாமியார் ஒருவர் இந்த கோவிலில் பூஜை நடத்தினார்.

பூஜைக்கு முடிவில் இந்த கோவிலுக்குள் வயது வந்த பெண் ஒருவர் முன்பு வந்து உள்ளார், என்று கூறினார்.

10:06 AM  2006ல் பிரபல சாமியார் ஒருவர் இந்த கோவிலில் பூஜை நடத்தினார்.

பூஜைக்கு முடிவில் இந்த கோவிலுக்குள் வயது வந்த பெண் ஒருவர் முன்பு வந்து உள்ளார், என்று கூறினார்.

 10:06 AM  2006ல் கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை கோவிலுக்குள் வந்ததாக கூறினார்.

1987ல் 28 வயது இருக்கும் போது வந்ததாக கூறி ஜெயமாலா பரபரப்பை ஏற்படுத்தினார்.

 10:06 AM 2006ல் இது குறித்து விசாரிக்க கேரள கிரைம் பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்தது அம்மாநில அரசு.

2006 இறுதியில் இந்த விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டது

10:06 AM  2006 இறுதியில் கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தது.

 10:05 AM  2 வருட காத்திருப்பிற்கு மார்ச் 7ம் தேதி 2008ம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்விற்கு சென்றது.

7 வருடம் இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.

எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

10:05 AM 2016 ஜனவரி 11ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

2017ம் ஆண்டு இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

 10:05 AM  கடந்த ஜூலையில், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது.ஆனால் கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.

 10:05 AM சென்ற மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

இந்த மாத இறுதியில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

9:22 AM சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய தடை

தடையை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

You'r reading சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி -உச்சநீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை