அகிம்சை முறையில் சாதித்த தேச தந்தை-காந்தி ஜெயந்தி.

Oct 2, 2018, 10:35 AM IST

`1 அகிம்சை முறையில் தன் சுதந்திர போராட்ட கொள்கையை வகித்துக் கொண்டு, தன்னை பின்பற்றுபவர்களையும் கடைப்பிடிக்கச் சொன்னவர் இவரின் இந்த அகிம்சை கொள்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்ரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்தது.

1893-1914 வரை தென் ஆப்ரிக்காவில் இருந்த காந்தி அங்கு பேசிய அரசியல் கருத்துக்கள், நெறிமுறைகள், அந்நாட்டின் அரசியல் மேம்பாடுக்கு முக்கிய காரணமாகவும், சுதந்திரத்திற்கு காரணமாகவும் அமைந்தது.

1915ல் இந்தியாவுக்கு திரும்பிய காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து, அப்போது அதன் தலைவராக இருந்த கோகலேவின் வழியை பின்பற்ற தொடங்கினார். இந்த கூட்டணி இந்திய சுதந்திரத்தை குறித்து ஆங்கிலேய தலைமையிடம் வலியுறுத்தி வந்தது.

1920ல் காங்கிரஸ் தலைவரான காந்தி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி தன் அகிம்சை போராட்டத்தை தீவிரப்படுத்தினார். 1930ல் ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்ததை தொடர்ந்து அதை ஏற்க மறுத்து உப்பு சத்யாகிரகம் நடத்தினார். மேலும் அந்நியர்கள் நமது நாட்டில் விளைந்த பொருட்கள் மீது வரிவிதிப்பதா என ‘உப்பு சத்தியாகிரகம்’ மேற்கொண்டார்.

தொடர்ந்து ‘அன்னிய பொருட்களை வாங்கக் கூடாது’ என்ற கொள்கையையும் வகுத்து, அன்னிய துனிகளை எரிக்கும் போராட்டமும் நடந்தது.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரம் அடைந்தது.

You'r reading அகிம்சை முறையில் சாதித்த தேச தந்தை-காந்தி ஜெயந்தி. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை