17 ஒப்பந்தங்கள் கையெழுத்து? இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே

by Manjula, Oct 2, 2018, 10:47 AM IST

அரசு முறைப் பயணமாக ஞாயிறன்று இந்தியா வந்த உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் சுற்றுலா, தேசிய பாதுகாப்பு, ராணுவ கல்வி, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார, மருத்துவ அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. போதைப்பொருள் கடத்தலை தடுக்க இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் அதிபர் தமது சிறப்புவாய்ந்த நண்பர் என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ், இந்தியா உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ராணுவ பயற்சி மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

You'r reading 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து? இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை