இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 8000
பதவி: Post Graduate Teacher (PGT)
பதவி: Trained Graduate Teacher (TGT)
பதவி: Primary Teacher (PRT)
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும் (01.04.2019 )
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பத்தாரர்களும் CTET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: APS அமைப்பால் நடத்தப்படும் ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 03.12.2018
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: http://www.aps-csp.in/ என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.awesindia.com/ என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018