உயிரை கொல்லும் காங்கோ காய்ச்சல் : கேரளாவில் உஷார் நிலை

Congo Fever spreaded kerala alert

by Devi Priya, Dec 4, 2018, 17:01 PM IST

கேரள மாநிலத்தின் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் காங்கோ காய்ச்சல் எனப்படும் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மற்றும் மனிதரையும் தாக்கவல்லது.

இந்நோய் கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணப்படுகிறது. 30% உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருச்சூருக்கு வந்த ஒருவர் காங்கோ காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிலருக்கு காங்கோ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை நிபுணர்கள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, பால்கன் நாடுகளில் காங்கோ காய்ச்சல் பரவி உள்ளது.

இந்த காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதால் இதுபோன்ற காய்ச்சல்கள் இங்கு பரவும் வாய்ப்பு ஏற்படுவதாக கூறினர்.

இதற்குமுன் கடந்த 2017-ல் கேரளாவில் பரவிய மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் நிபா வைரஸ் பரவியது. இதில் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். தற்போது காங்கோ காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

You'r reading உயிரை கொல்லும் காங்கோ காய்ச்சல் : கேரளாவில் உஷார் நிலை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை