கடன் வழங்கும் செயலி கழட்டிவிட்ட கூகுள்

by Balaji, Nov 19, 2020, 15:32 PM IST

எந்தவித அனுமதியும் இன்றி கடன் வழங்கி பலரைச் சிக்கவைத்த கடன் வழங்கும் செய்திகளைக் கூகுள் நிறுவனம் தனது ப்ளேஸ்டோர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் கடன் வழங்குவதை மிகவும் யோசித்துச் செயல்பட்டு வந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தற்போது கடன் பெறுவதை எளிமையாக்கி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களைச் சுண்டி இழுத்து வருகின்றன.

வாகன கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தனிநபர் கடன் என பல்வேறு வகையான கடன்களை அளித்து வருகிறது.கடன் வழங்கும் கடன் பெறும் வழிகளை எளிமையாக்கினாலும் நாளும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே கடன் கொடுப்பதை வங்கிகளும் இந்த பெரிய நிதி நிறுவனங்களும் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றன அந்த கடனை ஒருவர் பெறுவதற்கு சில தகுதிகளை அந்நிறுவனங்கள் வரையறுத்துள்ளார். அதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கப்படுகிறது.

தற்போது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் ஒருவரின் ஆதார், அல்லது முகவரி அடையாளங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சில செயலிகள் கடன் கொடுத்து வருகிறது. இதில், அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களும் உள்ளன. அண்மைக் காலமாக இந்த மாதிரியான செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது.இதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு, இந்த செயலிகளை நிர்வாகிக்கும் நிறுவனங்கள் மிரட்டல்கள் விடுப்பதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில், இந்த மாதிரியான செயலிகள் மூலம் மக்கள் அதிக அளவில் கடன் வாங்கியது குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் இவர்களது வலையில் சிக்கித் தவிப்பது தெரியவந்துள்ளது.இந்த செயலிகள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெயர் பெற்ற நிறுவனங்களின் பெயரைப் போலவே இருப்பதால், மக்கள் இதில் எளிதாகச் சிக்கி விடுகின்றனர்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் ok cash, go cash,flip cash,e cash, snapltloan ஆகிய ஐந்து செயலிகளை, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

You'r reading கடன் வழங்கும் செயலி கழட்டிவிட்ட கூகுள் Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை