கனிமொழிக்கு செக் வைத்த சபரீசன்! கூட்டணிப் பேச்சிலும் முன்னிறுத்தப்பட்ட மர்மம்!

டெல்லியில் நடக்கும் கூட்டணிப் பேச்சில் சபரீசன் முன்னிறுத்தப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறது ராஜாத்தி அம்மாள் தரப்பு. மக்களவைத் தேர்தல் முடிவதற்குள் கட்சியிலும் மத்தியிலும் வலுவான இடத்தைப் பிடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் சபரீசன்.

இதற்கான டெல்லியில் தனி அலுவலகமே நடத்தி வருகிறார். ராகுல்காந்தி உட்பட முக்கியத் தலைவர்களுடன் கனிமொழி உரையாடும்போதெல்லாம், அங்கு சபரீசனும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

தூத்துக்குடி தொகுதியை மையமாக வைத்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ள கனிமொழி, தேர்தலுக்குப் பிறகு டெல்லியின் முகமாகவே இருக்க விரும்புகிறார். தமிழக அரசியலுக்குள் கால்பதிக்கவும் அவர் விரும்பவில்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் நடத்திய லாபி, தொடர்ந்துவிடக் கூடாது என நினைக்கிறார் ஸ்டாலின். அதனாலேயே திமுகவின் முகமாக டெல்லியில் கால்பதித்திருக்கிறார் சபரீசன்.

இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி, நெகட்டிவ்வாக மாறிவிடக் கூடாது என்பதற்காக சபரீசனின் பங்கேற்பு குறித்த தகவல்களை வெளியிடாமல் மௌனம் காட்டுகிறதாம் அண்ணா அறிவாலயம்.