லட்சுமி விலாஸ் பாங்க் நிர்வாகத்தில் சிக்கல்.. ரிசர்வ் பாங்க் தலையீட்டால் தற்காலிக நிம்மதி...

Problem in Lakshmi Vilas Bank, Temporary relief in case of RBI intervention

by Balaji, Sep 28, 2020, 18:30 PM IST

தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்று, லட்சுமி விலாஸ் வங்கி. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த சில மதகங்களாக ஏற்பட்டு வரும் பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க லட்சுமி விலாஸ் வங்கி புதிய சிஇஓ-வை நியமிக்கவும், வங்கி நிர்வாகத்தைச் சீர்படுத்தவும் ரிசர்வ் வங்கியின் உதவியை நாடியுள்ளது. இதன் காரணமாக இவ்வங்கி வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.

94 வருடப் பாரம்பரியம் கொண்ட வங்கி லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் மத்தியில் வெடித்த பிரச்சனையின் காரணமாகச் சமீபத்தில் அதன் 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டனர் , இதனால் இந்த வங்கி சிஇஓ மற்றும் ப்ரோமோட்டர் இல்லாமல் இயங்குகிறது. தற்காலிகமாக ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தை நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்புகளை மீட்டா மக்கான் என்பவருக்கும் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகச் சக்தி சின்ஹா மற்றும் சதீஷ் குமார் கார்லா ஆகியிருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேருக்கும் பங்குதாரர்கள் தங்களது பணிகளைத் தொடர் வாக்கு அளித்துள்ளனர் .

லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சமீபத்தில் இவ்வங்கியின் சிஇஓவாக நியமிக்கப்பட்ட எஸ் சுந்தர், மற்றும் மீண்டும் நியமிக்கப்பட்ட 6 இயக்குனர்களின் நியமனத்தைப் பங்குதாரர்கள் 100 சதவீதம் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளித்தனர். இதன் பின்பே ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கியுள்ளது. 1991 உலகமயமாக்கல்-க்குப் பின் இந்திய வங்கித்துறையில் நடந்த மோசமான நிகழ்வுகளில், வங்கி நிர்வாகத்திலும், மோசமான மேலாண்மையில் மூலம் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனை மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவைத் தாண்டி இவ்வங்கியின் நிதி நிலை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்து, முறையான வழிகாட்டலைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் தற்போது நிலையான தலைவர் இல்லாமல் இயங்கி வருவதாலும், ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகிய அமைப்புகள் நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு முதலீட்டாளர்கள், வங்கியின் பணத்தை டெப்பாசிட் செய்தோர், ஊழியர்கள் என வங்கிக்குத் தொடர்புடைய அனைவரும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளனர். . லட்சுமி விலாஸ் வங்கியின் இரண்டு முன்னாள் அதிகாரிகளை மோசடி செய்த காரணத்தால் கடந்த வாரம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் பங்குச்சந்தையில் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு மதிப்பு வரலாற்று உச்சமான 180 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.லட்சுமி விலாஸ் வங்கியில் தற்போது வெடித்துள்ள பிரச்சனையின் காரணமாக இவ்வங்கி உடனான கிளிக்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் கூட்டணி என்னவாகும்..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிளிக்ஸ் கேபிட்டல் நிதி சேவைத் துறையில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சிக்காகவும் லட்சுமி விலாஸ் வங்கி டெல்லியைச் சேர்ந்த கிளிக்ஸ் கேபிட்டல் நிறுவனத்துடன் இணைத்திடப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த வர்த்தக இணைப்பால் இரு தரப்பிற்கும் பல்வேறு சாதகமான வர்த்தக வளர்ச்சி இருப்பதாகக் கருத்து நிலவி வந்தது. லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் கிளிக்ஸ் கேப்பிடல் சர்வீஸ், கிளிக்ஸ் பைனான்ஸ் ஆகிய கூட்டணி நிறுவனங்கள் மத்தியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகி வர்த்தக இணைப்பிற்காகத் தயாராகி வந்தது. ஆனால் இந்த இணைப்பு மற்றும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கு ன் காரகணமாகக காலதாமதம் ஆனது. லட்சுமி விலாஸ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கி தற்போது பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்தாலும், 3 பேர் கொண்ட நிர்வாகம் வங்கியை நடத்துவதால் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

மேலும் வங்கி நிர்வாகம் கிளிக்ஸ் கேப்பிடல் உடனான வர்த்தக இணைப்பைக் கைவிட முடிவு செய்யவில்லை, இணைப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் எனச் சக்தி சின்ஹா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லி தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிளிக்ஸ் கேப்பிடல் அடுத்தச் சில நாட்களுக்கு லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தில் எடுக்கப்படும் மாற்றங்களைக் கண்காணித்து அதன் பின்பு வர்த்தக இணைப்பு குறித்து முடிவு செய்வோம் எனத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியைக் கைப்பற்ற இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் முயற்சி செய்த போது ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கிளிக்ஸ் கேப்பிடல் உடனான வர்த்தக இணைப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

You'r reading லட்சுமி விலாஸ் பாங்க் நிர்வாகத்தில் சிக்கல்.. ரிசர்வ் பாங்க் தலையீட்டால் தற்காலிக நிம்மதி... Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை