எதிர்காலத்தில், ஒரு நாளுக்கு 24 மணி நேரத்திற்கு பதில் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரித்து 25 மணி நேரமாக மாறும் என புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியதாவது: கடந்த 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அருகில் நிலவு இருந்தது.
அது தற்போது 44 ஆயிரம் கி.மீ தூரம் விலகி சென்றுள்ளது. இதேபோல், 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடங்களாக இருந்தது. இது தற்போது 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
நிலவு ஆண்டுக்கு 3.82 செ.மீ அளவிற்கு விலகிச் சென்று கொண்டு இருக்கிறது. இதனால், சில மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு, நிலவு அதிகம் தூரம் சென்றுவிடும் என்பதால் சுற்றும் வேகத்தில் மாறுபாடு ஏற்படும்.
இதனால், பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக மாறும். ஆனால், இந்த நேர மாற்றத்திற்கு இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இவ்வாறு ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.