ஐபிஎல் திருவிழா: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா சென்னை அணியின் துவக்க வெற்றியுடன் துவங்கி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்று சென்னை ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்று நடைபெறவுள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இம்ரான் தாஹிர், மோகித் ஷர்மா, பிராவோ, ஷர்துல் தாக்கர் என பந்து வீச்சாளர்கள் அசத்தி வரும் நிலையில், சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது சிறப்பான முடிவாக கருதப்படுகிறது.

மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, குயின்டன் டி காக், யுவராஜ் சிங், கெய்ரன் பொலார்டு உள்ளிட்ட ஜாம்பவாங்களை விரைவில் வீழ்த்தி விட்டால், எளிய ரன் சேஸிங்கில் சென்னை அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்யும்.

3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி, 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

அதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் மும்பை அணி அதிக ரன்களை குவிக்கவும் யூகம் வகுத்துள்ளது.

மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெறுவதால், மும்பை அணிக்கு கூடுதல் பலம் சேரும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்