விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி-ஐயர் ஜோடி ; மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் டி20 போட்டி போல் விஸ்வரூபம் எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது.

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆடியது. 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

அடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா பங்கேற்றது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது.போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2-வது போட்டியிலும் மழை குறுக்கீடு செய்தது. ஆனாலும் டக்வொர்த் லீவிஸ் முறையில் 56 ரன்கள் வித்தியாகத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இதன் மூலம்
1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயிலும், லூயிசும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இந்திய பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர், சமி, கலீல் அகமது ஆகியோரின் பந்துகளை அனாயாசமாக சிக்சர் பவுண்டரிகளாக இருவரும் பறக்க விட்டனர். இன்றைய போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 10 ஓவர்களில் இருவரும் 115 ரன்களை குவித்தனர்.

வேகப்பந்து வீச்சு எடுபடாததால் சுழல் வீரர் சகாலை பந்து வீச அழைத்தார் கோஹ்லி. இதற்கு கைமேல் பலனாக முதல் ஓவரிலேயே லீவிஸ் வீழ்ந்தார். 29 பந்துகளில் 43 ரன் குவித்த லீவிஸை சகால் வெளியேற்றினார். கலீல் அகமது வீசிய அடுத்த ஓவரிலேயே கெயிலும் அவுட்டானார்.41 பந்துகளில் 72 ரன்களை ( 5 சிக்சர், 8 பவுண்டரி) விளாசியிருந்த கெயில் அவுட்டானவுடன் தான் இந்திய வீரர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி கிடைத்தது. அதிரடிக்கு பெயர் போன கிறிஸ் கெயிலுக்கு இதுதான் கடைசி போட்டி . இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறும் 39 வயதான கெயில், தனது கடைசி போட்டியிலும் தனது அதிரடி புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரையை பதித்தார் என்றே கூறலாம்.

கெயில், லூயிஸ் ஆகியோர் அவுட்டான பின்னர் மே.இ.தீவுகளின் சாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் ஜோடி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சகால் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி மே.இ.தீவுகளின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். மே.இ.தீவுகள் அணி 22 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.

மழையால் சுமார் 3 மணி நேரம் ஆட்டம் தடைபட்ட நிலையில், 35 ஓவராக நிர்ணயிக்கப்பட்டு மீண்டும் போட்டி தொடர்ந்தது.கடைசி 13 ஓவர்களில், சீரான இடைவெளியில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் சேர்த்தது மே.இ.தீவுகள் அணி . இதனால் 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு, டக்வொர்த் லீவிஸ் முறையில் 35 ஓவர்களில் 255 ரன்கள் எடுக்க வேண்டும் என கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோகித் (10), தவான் (36), ரிஷப்பான்ட் (0), ஏமாற்ற, கேப்டன் கோஹ்லியும், ஸ்ரேயா ஐயரும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.டி 20 போட்டி போல் இருவரும் அதிரடி காட்டினர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 65 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 3 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.அடுத்து வந்த ஜாதவ் (19) கைகொடுக்க, மறு முனையில் அதிரடி காட்டிய கோஹ்லி, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கோஹ்லி 99 பந்துகளில் 114 ரன்கள் குவித்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 43-வது சதத்தை பதிவு செய்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.மே.இ.தீவுகளுக்கு எதிராக 2006 முதல் தொடர்ந்து 9 -வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றிய சாதனையையும் இந்தியா படைத்தது.

உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் ஏமாற்றிய கேப்டன் கோஹ்லி இந்தத் தொடரில் 2 சதங்கள் விளாசி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளையும் கோஹ்லி தட்டிச் சென்றார்.

மே.இ.தீவுகளுடன் இன்று கடைசி ஒருநாள் போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா? பயமுறுத்தும் மழை

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
BCCI-source-says-no-threat-to-Indian-cricket-team-and-the-email-received-by-PCB-was-hoax
இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த சதியா? இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி - பிசிசிஐ தகவல்
Ravi-Shastri-again-elected-as-Indian-cricket-teams-head-coach
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு
Many-cricketers-condolence-for-ex-cricketer-VB-Chandra-Sekhars-death
வி.பி. சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் ; ராகுல் டிராவிட் நேரில் அஞ்சலி
Interview-for-Indian-cricket-teams-head-coach-begins-advantage-for-Ravi-Shastri-again
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல்; ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு..?
Reasons-for-ex-Indian-cricketer-V-P-Chander-sekars-suicide
முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை ; வங்கிக் கடன் பிரச்னை காரணமா?
Chris-Gayle-says-no-retirement-still-i-am-in-the-w.indies-team
ஓய்வு பெறுவதாக நான் எப்போ அறிவித்தேன்..? வழி அனுப்பிய வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கெயில்
India-won-the-one-day-series-against-WI-by-2-0
விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி-ஐயர் ஜோடி ; மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
Ind-vs-WI-final-ODI-Chris-Gayle-scores-quick-72-runs-of-41-ball-in-his-careers-final-match
இந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : தனது கடைசி போட்டியில் காட்டடி தர்பார் காட்டிய கெயில்
Ind-vs-WI-final-ODI-rain-may-affect-todays-match-in-Port-of-Spain
மே.இ.தீவுகளுடன் இன்று கடைசி ஒருநாள் போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா? பயமுறுத்தும் மழை
Virath-Kohli-century-helps-India-to-win-2nd-ODI-against-WI
சாதனை மேல் சாதனை படைக்கும் கோஹ்லி : மே.இ.தீவுகளை வென்றது இந்தியா
Tag Clouds