ஆசிய கோப்பை: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான்!

by Mari S, Sep 19, 2018, 20:59 PM IST

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இன்று மாலை 5 மணிக்கு துவங்கவுள்ள, இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியை வெல்ல வேண்டும் என்றால், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி, ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். சேஸிங்கில் இந்தியா வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணியை திணற வைக்க இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்கள் இன்று முயற்சி செய்ய வேண்டும். விக்கெட்டுகளை விரைவாக எடுப்பதன் மூலம் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

200 ரன்களுக்கு சுருட்ட வேண்டும்:

50 ஓவர் கொண்ட ஒரு நாள் லீக் தொடரான, இன்றைய ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

அதேபோல், இந்திய பேட்ஸ்மேன்கள், தங்களது பொறுப்பை உணர்ந்து நிதனமாகவும், ரன்களை விளாசியும் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.

பாகிஸ்தான் அணி:

பக்கர் ஜமான், இமாம் உல்-அக், பாபர் அஜாம், சோயப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்&வி.கீப்பர்), அசிப் அலி, ஷதாப் கான், ஃபஹீம் அஸ்ரப், முகமது அமீர், ஹசன் அலி, உஸ்மான் கான்.

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி(வி.கீ), ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, சாஹல்.

You'r reading ஆசிய கோப்பை: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை