ஆசிய கோப்பை: இந்தியாவை டிரா செய்து ஆப்கானிஸ்தான் ஆறுதல்

by Mari S, Sep 26, 2018, 13:08 PM IST

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை முழு பலத்துடன் எதிர்கொண்டது. இந்திய அணி ஏற்கெனவே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதால், இது ஒரு பயிற்சி ஆட்டமாகவே கணிக்கப்பட்டது. இதனால், இப்போட்டியில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

தோனியின் கேப்டன்ஷிப் என்பதால், இந்த போட்டியை ரசிகர்கள் ஸ்கிப் செய்யாமல் பார்க்கத் துவங்கினர்.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர் முகமது ஷசாத், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, 116 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் என 124 ரன்களை குவித்து அபாரமான துவக்கத்தை தந்தார்.

ஆனால், அவருக்கு இணையாக ஆப்கானிஸ்தான் அணியில் பார்ட்னர்ஷிப்கள் கைக் கொடுக்காதாமல் ஒற்றை இலக்க எண்ணிற்கும் இருவர் டக்கவுட்டும் ஆகினர். கேதார் ஜாதவ்வின் பந்துவீச்சில் 124 ரன்களில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து முகமது ஷசாத் அவுட்டானர்.

இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. 7வது ஆட்டக்காரராக களமிறங்கிய முகமது நபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 64 ரன்களை விளாசினார். 50 ஓவர் முடிவுக்கு ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் அம்பத்தி ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். அம்பத்தி ராயுடு 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் அரைசதத்தின் அருகில் வந்து 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன். இந்திய அணி தடுமாற தொடங்கியது.

கேப்டனாக மீண்டும் களமிறங்கிய தோனி அசத்துவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு 8 ரன்களில் அவர் ஜாவேத் அகமது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் இந்திய அணியின் சார்பில் எந்தவொரு வீரரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதல், 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் டிரா செய்தது.

இன்று நடைபெறவுள்ள பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கடைசி சூப்பர் 4 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் செப்.டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெறும்!

You'r reading ஆசிய கோப்பை: இந்தியாவை டிரா செய்து ஆப்கானிஸ்தான் ஆறுதல் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை