ஜூனியர் ஹாக்கி – ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக்!

ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

Oct 10, 2018, 09:16 AM IST

மலேசியாவில் நடைபெற்று வரும் 8வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி – ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது.

Junior Hockey

இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து என ஆறு அணிகள் மோதும் 8வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி போட்டி, மலேசியாவில் உள்ள தாமன் தயா ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி, வரும் அக்டோபர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இதுவரை இந்திய அணி, 3 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், இந்திய அணி மலேசிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணியை 7-1 என்ற அபார கோல் கணக்கில் துவம்சம் செய்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணி ஜப்பான் அணியை கோல் எதுவும் எடுக்க விடமால் 1-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இன்று நடைபெறும் போட்டியில், ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய ஹாக்கி அணி மோதுகிறது.

புள்ளி பட்டியலில், முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி, வரும் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு எளிதில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.

சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு பெற்றார் இது குறித்து அறிய... இங்கே க்ளிக் செய்யவும்.

You'r reading ஜூனியர் ஹாக்கி – ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக்! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை