நாடாளுமன்றத் தேர்தலுக்கு எத்தனை சி செலவாகும், விஐபி தொகுதிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு, பசையுள்ள வேட்பாளர்கள் யார் யார் என அதிமுக தரப்பில் தகவல்களை சேகரித்து வருகின்றனர். அதிமுகவை நம்பி பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வர உள்ளன.
இவர்களுக்கு தொகுதிப் பங்கீட்டுடன் பெருமளவு பெட்டிகளை ஒதுக்க வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி தனது மூத்த அமைச்சர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் இருந்து நிதியை எதிர்பார்க்கிறேன் எனக் கூற, இதை எதிர்பார்க்காத பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சிகளோடு உங்கள் தரப்பு அமைச்சர்கள்தான் பேசி வருகின்றனர். எங்களைக் கேட்டு எதுவும் நடப்பதில்லை.
உங்களைத் தேடி வந்த அரசியல் கட்சிகளுக்கு நீங்கள்தான் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள். எனவே, அவர்களுக்கான தொகையையும் நீங்களே செட்டில் செய்துவிடுங்கள். எங்களிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை' எனக் கூறிவிட்டாராம். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
- அருள் திலீபன்