ஹெட்போன், இயர்பட்ஸ்: இரண்டில் எது உங்களுக்கு ஏற்றது?

by SAM ASIR, Dec 29, 2020, 18:47 PM IST

ஹெட்போன்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஸ்மார்ட் போன்களோடு உபயோகிக்கப்படும் ஹெட்போன்கள் உண்மையில் அத்தியாவசியமானதா என்ற கேள்வியும் எழும்புகிறது. வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரத்தினால் (WFH) ஹெட்போன்கள் 2020ம் ஆண்டில் அதிகமாக விற்பனையாகியுள்ளது. பலவிதமான ஹெட்போன்கள் இருந்தாலும் over-the-ear headphoneகளும் இணைப்பில்லாத earbudகளும் முக்கியமானவையாக உள்ளன. இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ளன. பெருந்தொற்றின் காரணமாக, வீட்டிலிருந்து பணிபுரியும் புது வழியை அமைத்துள்ளது.

இந்த புதிய இயல்பு வாழ்க்கை ஹெட்போன்கள் மற்றும் இயர்போன்கள் வாங்கும் படியுமான கட்டாயத்தை உருவாக்கியுள்ளன. இணைப்பில்லாத இயர்பட்கள் (wireless earbuds) நடந்தபடியே பேசுவதற்கு சில வேளைகளில் வேலை செய்வதற்கும் உதவுகின்றன. கையில் போனை பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாமலாகிறது.நம்முடைய காதுகள் தங்களை தாங்களே சுத்தம் செய்து கொள்ளும் முறையைக் கொண்டவை என்றும் தொடர்ந்து இயர்பட்களை பயன்படுத்துவது அந்தச் செயல்பாட்டைப் பாதிக்கும் என்றும் மூக்கு, காது, தொண்டை நிபுணர்கள் கூறுகிறார்கள். இயர்பட்களில் இருந்து வரும் ஒலி, நேரடியாக செவி நாளத்திற்குள் செல்வதால் காதில் இருக்கும் மெழுகைச் செவிக்குள்ளாகத் தள்ளக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து நெடுங்காலம் அவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

ஹெட்போன், இயர்பட் ஏதுவாக இருந்தாலும் நாள்பட்ட பயன்பாடு ஆரோக்கியத்திற்கு கேடு என்றும், மடிக்கணினி (laptop) ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம் என்றும் சில வல்லுநர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். இயர்பட் என்பது வசதியானது; ஹெட்போனானது சற்று ஆரோக்கியமானது என்றும் கூறப்படுகிறது.நவீன கால இயர்பட்கள் மற்றும் ஹெட்போன்கள் 85 முதல் 110 டெசிபல் அளவு ஒலியினை வெளியிடக்கூடியவை. 85 டெசிபலுக்கு மேலான ஒலி காதுகளுக்கு ஏற்றதல்ல. தொடர்ந்து இதுபோன்ற அளவிலான ஒலியினை கேட்பது நல்லதல்ல என்றும் ஆரோக்கிய ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

70 டெசிபல் ஒலி அளவே பரிந்துரைக்கத்தக்கது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹெட்போன் செயலிகள் ஒலி அளவை காட்டும் திறன் கொண்டிருக்கின்றன.நல்ல இயர்பட்கள் ரூ.2,000 முதல் ரூ.4,000 விலையில் கிடைக்கின்றன. அதே அளவு தரம்கொண்ட ஹெட்போன்கள் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை விலையுள்ளன. இயர்பட்களை பயன்படுத்துவது வசதியாயினும், ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் ஹெட்போன்களே ஓரளவுக்குச் சிறந்தவையாகும்.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை