முதலில் தேசியம் தான், பின்னர் தான் ஐபிஎல் கரார் காட்டும் பங்களாதேஷ் வீரர்!

by Loganathan, Feb 23, 2021, 21:42 PM IST

ஐபிஎல் 14 வது சீசனுக்கான வேலைகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 18 அன்று சென்னையில் ஐபிஎல் 2021 ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலத்தொகை நடைபெற்றது. இதில் 292 வீரர்கள் பங்குபெற்றனர். அதில் 125 வீரர்கள் வெளிநாட்டினை சார்ந்தவர்கள் மேலும் 3 வீரர்கள் அண்டை நாட்டை சார்ந்த வீரர்கள் ஆவர். இந்த வீரர்களில் வங்காள தேசத்தை சார்ந்த வீரர்களில் முஷ்ஃபிகர் ரகுமான் மற்றும் ஷகிப் உல் ஹசன் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வங்கதேச வீரரான ஷகிப் உல் ஹசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முஷ்பிகர் ரகுமானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.

வங்கதேச அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதற்கான உத்தேச அணி தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்பினால், தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு தடையின்மை சான்று அளிக்கவும் தயாராக உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் ஆணையத்தின் தடையின்மை சான்றினை ஷகிப் உல் ஹசன் பெற்று கொண்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஷ்ஃபிகர் ரகுமான் இன்னும் தடையின்மை சான்றினை பெறவில்லை.

இது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "நான் தேசப்பற்று உடையவன், எனது முன்னுரிமை எப்போதுமே தாயகத்திற்காக தான் இருக்கும். இலங்கை சுற்றுப்பயணத்தில் என்னை தேர்வு செய்தால் நான் தேசிய அணிக்காக விளையாட தயாராக உள்ளேன். தேர்வு செய்யாத பட்சத்தில், ஐபிஎல் விளையாடவதனை பற்றி சிந்தனை செய்வேன்" என்று கூறியுள்ளார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பூஉம் குறிப்பிடத்தக்கது.

You'r reading முதலில் தேசியம் தான், பின்னர் தான் ஐபிஎல் கரார் காட்டும் பங்களாதேஷ் வீரர்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை