வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்... மத்திய அரசு பொது மக்களுக்கு பரிந்துரை..!

by Logeswari, Apr 27, 2021, 19:22 PM IST

வீட்டில் இருக்கும்போதும் அனைவரும் முக கவசம் அணியுங்கள் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் வகையில், மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால் என்பவர் நேற்று பேட்டி அளித்தனர். அப்பொழுது டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:- நாம் இதுவரை வீட்டுக்கு வெளியே செல்லும்போது முக கவசம் அணிவதைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம்.

ஆனால், தொற்று பரவும் விதத்தை பார்த்தால், வீட்டில் இருக்கும்போதும் முக கவசம் அணிவது நல்லது. அதிலும், வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்து விட்டால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அவர் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். தற்பொழுது இருக்கும் நிலையில் யாருக்கு கொரோனா தொற்று இருப்பது என்பது நம்மால் கணிக்க முடியாது.

அதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லதாகும். அதுபோல மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் நோக்கத்தில் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேட்டியில் கூறியிருந்தார்.

You'r reading வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்... மத்திய அரசு பொது மக்களுக்கு பரிந்துரை..! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை