ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டி

Feb 28, 2021, 15:08 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக உள்ளன. திமுகவின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

1984ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் ஒன்பதாவது முறையாக வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அவர் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் மு.க.ஸ்டாலின், மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கொடுத்துள்ளார். இதனால் கொளத்தூரில் அவர் மீண்டும் களம் காண்பது உறுதியாகியுள்ளது.

அண்மைய செய்திகள்