சினிமாவில் வேலை இல்லாததால் மீன் வியாபாரம் தொடங்கிய தமிழ் நடிகர்.. பிளாட்பாரங்களில் கடை வைக்கும் துணை நடிகர்கள்..

by Chandru, Sep 28, 2020, 13:40 PM IST

கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலர் தங்கள் வேலையை இழந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையை பொருத்தவரை படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் தங்களது வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாமல் பொருளாதாரா நிறைவுடன் இருக்கிறார்கள். துணை நடிகர்கள், தொழிலாளர்களின் வாழ்க்கைதான் கேள்விக் குறியாகிவிட்டது. கடந்த 5 மாதமாக வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். சில நடிகர்கள் கையிலிருக்கும் ஆயிரம், 2அயிரம் பணத்தை முதலீடு செய்து பிளாட்பாரத்தில் காய்கறி கடை நடத்தி பிழைக்கிறார்கள்.


சிவாஜி, வெண்ணிலா கபடி குழு, கோ, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் மெய்யப்பன். கடந்த 5 மாதமாக படப்பிடிப்பு இல்லாததால் இவர் தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு திரும்பி சென்றார். ஊரில் வேலை தேடியும், கிடைக்கவில்லை. தற்போது கையிலிருந்த பணத்தை வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். மாலை வேளையில் வண்டியில் சிக்கன், மீன் வறுவல் வியாபாரம் செய்கிறார். இதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறாராம்.
படப்பிடிப்புகள் தொடங்கினாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நடிகர்கள் படக் குழுவினர் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுபாடு இருப்பதால் எல்லோருக்கும் முழு அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

Get your business listed on our directory >>More Cinema News