“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”

by Sasitharan, Apr 10, 2021, 09:52 AM IST

நடிகர்கள் கமல்ஹாசனும், அஜித்குமாரும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இயக்குநர் ஸ்ரீராம் குற்றம்சாட்டியுள்ளார்.

பரதக்கலையை முழுக்க முழுக்க மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை இயக்குநர் ஸ்ரீராம் இயக்கி முடித்துள்ளார்.

படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே நடிகராகவும் நடித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் நான் இருக்கிறேன் என ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர் என்றும், ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், எனது அப்பா சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார் எனவும் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள் என ஆவேசம் அடையும் ஸ்ரீராம், பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடித்த 'வரலாறு' படத்தில் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்றும்,

'விஸ்வரூபம்' படத்தில் கமல்ஹாசன் நாட்டியக் கலைஞராக இருப்பதால், அவரது மனைவி வெறுப்பதாக காட்டப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரதநாட்டியம் தெரிந்த நடிகர் ஜெயம் ரவியே ரோமியோ ஜூலியட் படத்தில் டண்டணக்கா பாடலுக்கு, பரதத்தை அவமதிக்கும் வகையில் ஆடியுள்ளார் என ஸ்ரீராம் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன். பஞ்சபூதங்கள் பற்றி இது தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தேன் என ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இதற்காக நானே 'குமார சம்பவம்' என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். நான் பரதத்தை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். பஞ்சபூதங்கள் பற்றியும், ஐந்திணைகள், நவக்கிரகங்கள் பற்றியும் நாட்டியத்தில் சொல்லி வருகிறேன். முதல் பிரதி தயாராக கிராமத்துக் காவல் தெய்வங்களான ஏழு முனிகள் பற்றிய நாட்டியத்தையும் ஆடியிருக்கிறேன். கார்கில் போர் நடந்தபோது அதைப் பற்றியும் பரதத்தில் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது. அதுதான் என்னுடைய நோக்கம் என்றும் இயக்குநர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

You'r reading “நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்” Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை