`சம்பள பிரச்சனை; போட்டோ அனுப்பினோம்' - நாமக்கல்லில் முதலாளியின் மனைவிக்கு ஆபாச போட்டோ அனுப்பிய ஊழியர்கள்

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, அதை வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் துயரத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தப் புகாரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பன், காதலன், அண்ணன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அழைத்து வந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியுள்ளனர் இந்தக் கொடூரர்கள். சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனியார் கல்லூரிப் பேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல்லில் பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் மூன்று பேர் கொண்ட கும்பல். நாமக்கல் மாவட்டம் பூங்குளம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார். பெயிண்டிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பணிபுரிந்தவர்கள் தான் கஸ்தூரிபட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ். சமீபத்தில் இந்த மூன்று பேருக்கும் விஜயகுமாருக்கும் சம்பளம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால், 3 பேரும் அண்மைக்காலமாக விஜயகுமாரிடம் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக, விஜயகுமார் மனைவி காயத்ரியின் மொபைல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் வந்துள்ளது. இதை அறிந்த, காயத்ரியின் கணவர் விஜயகுமார், போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகியோர் தான் விஜயகுமார் மனைவிக்கு ஆபாச படங்களை அனுப்பியதை கண்டுபிடித்தனர்.இதன்பின் மூவரையும், கைது செய்த போலீசார் பெண்களை இழிவுப் படுத்துதல், பாலியல் துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்