புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் புதுக்கோட்டை எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ``கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் எனது பெற்றோர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த நான் சென்னையில் ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்துவந்தேன். இந்த சமயத்தில் தான் கடந்த 3ம் தேதி எங்கள் ஊர் திருவிழா வந்தது. இதற்கு என்னை அழைத்துச் செல்வதாக கூறி நான் பணிபுரியும் வீட்டில் இருந்து ஊருக்கு அழைத்துச் சென்றார் என் தந்தை. ஊருக்கு அழைத்துச் சென்றவர் அங்கு என்னை அடைத்து வைத்து என்னை பாலியல் தொந்தரவு செய்தார். ஒருவார காலம் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தார். திருமணம் செய்து வைக்கும் வரையிலும், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தெரிவித்தார். மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.
இந்த தகவல் என் அக்காவுக்கு தெரிவித்தேன். அவள் வந்து என்னை தந்தையிடம் இருந்து மீட்டார். அப்போது தான் தெரியவந்தது. அக்காவுக்கும் தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்திருந்தது. இதனிடையே எனக்கும் எனது சகோதரியின் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பும் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னையும், என் கணவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். எனது தந்தையிடமிருந்து பாதுகாக்க எனக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். பெற்ற மகளுக்குத் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.