மாணவர்களுக்கு சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் வேண்டும் - விஜயதரணி

மாணவர்கள் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, கீழ் படிதல், சமூக சிந்தனை ஆகியவற்றுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விஜயதரணி எம்எல்ஏ கூறினார்.

Vijayadharani

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட அருமனை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, தமது தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கணினி உபகரணங்களை விஜயதரணி எம்.எல்.ஏ. வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், “புதிய கண்டுபிடிப்புகளை நம் மாணவர்களும் உருவாக்க வேண்டும். மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் சுய சிந்தனையுடன் தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள், ஆராய்ச்சி மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் புதிய புதிய புத்தகங்கள் அறிவு தேடல்களை படித்து ஆராய்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, கீழ் படிதல், சமூக சிந்தனையுடன் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும். மாணவ-மாணவிகள் நன்கு விளையாடி உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைக்க வேண்டும். இரக்க சிந்தனையோடு வாழ வேண்டும்.” என்றார்.