கணவருக்கு வீண் அலைச்சல்: டாஸ்மாக் கடையை திறக்கும்படி வலியுறுத்தும் பெண்கள்

விழுப்புரம் அருகே, கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்தி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

இதனால், குடிமகன்கள் 5 கி.மீ கடந்து சென்று மது குடிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், தங்களது கணவன்மார்கள் மது குடிப்பதற்காக நீண்ட தூரம் கடந்த சென்று வருவதால் அலைச்சலும் கடும் சிரமமும் ஏற்படுவதாக அப்பகுதி பெண்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதனால், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தை கலைக்க முயன்றனர்.

இதற்கிடையே, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு போராடிய பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Movie scenes canceled across Tamilnadu

திமுக கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தற்போது முதல் நாளை வரை தமிழகம் முழுவதும...

Unlicensed liquor bars are closed in seven days says Tamil Nadu Government

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் ...

Drug Rehabilitation Center to be set up in Government hospitals: HC order

இதுபோன்ற மையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இல்லாததால் மாதந்தோறும் சுமார் 75 பேர் இறக்கின்றனர்...

Woman confessed as opposed to the love mixed poison in alcohol

தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதுவில் விஷம் கலந்தேன் என்று கொலை செய்யப்பட்ட முருகனின் சக...

4 killed who drunk Tasmac alcohol in Sivakasi

டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் க...

Tasmac shop emploees union annouced shutdown n protest on 29th oh may

வரும் 29ம் தேதி அன்று கடையடைப்பு வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அ...