கிராமப்புற பட்டதாரிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு!

by Loganathan, Dec 5, 2020, 19:20 PM IST

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய விண்வெளி ஆராய்ச்சி அலுவலகத்தில் தட்டச்சு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: செயலர், செயலர் உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தர்.

பணியிடங்கள்: 24

வயது: 28 வயது வரை

தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் கட்டாயம்.

ஊதியம்: ரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: 27.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குப் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

http://khoj.nal.res.in/Khojadmin.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/advt27112020.pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை