பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை!

by Loganathan, Dec 31, 2020, 11:31 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, அலுவலக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNRD – Thiruvannamalai லிருந்து காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 28.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: பத்தாம் வகுப்பு முடித்த, 01.07.2021ம் தேதி படி 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் இனங்காணப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரியச் சான்றிதழ்களுடன் 28.01.2021க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/TNRD-Tiruvannamalai-Record-Clerk-Offline-Application-Form-2021-Notification.pdf

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்