கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி!

by Loganathan, Jan 9, 2021, 12:14 PM IST

இந்தியன் வங்கி ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் ஓர் அங்கமாகச் செயல்படும் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி நடைபெற உள்ளது. இந்த தொழிற்பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த தொழில்முனைவோராக உருவெடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி: இதற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி: சிசிடிவி கேமரா சம்பந்தமான பயிற்சிகள். பாடத்திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திறம் மேம்பாட்டுக் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, பயிற்சிகள் Skill India அமைப்பால் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கான நேர்முகத்தேர்வு வரும் 19-01-2021 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆவணங்கள்: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 100 நாள் வேலை அடையாள அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்:

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.

சுயதொழில் பயிற்சியுடன், தொழில் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

மேலும் இந்த பயிற்சிக்கான அறிவிப்பு விவரங்கள் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

You'r reading கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை