கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 05-02-2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: Level - 8: Rs. 19500/- to 62000/-

வயது

01.07.2019 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது 18 முதல்35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் 05-02-2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Head,
Animal Husbandry Department,
Pudugramam,
Thoothukudi-628003.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/2021012011.pdf

Advertisement
/body>