இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து (RBI) காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 241
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.10,940/- முதல் ரூ.23,700/- வரை
பணியிடம்: அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, குவகாத்தி, ஹைதராபாத், ஜம்மு, ஜெய்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி பாட்னா மற்றும் திருவனந்தபுரம்.
வயது: 25 முதல் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுபிரிவினர் – ரூ.25/-
SC/ST /PH/Women – கட்டணம் வேண்டியதில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
இணையவழி தேர்வு, உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 12.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/SECURITYGUARDS2020FE0D84160BC54A1687D88F6652B35DDB.PDF